/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் துவக்கம்
/
புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் துவக்கம்
புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் துவக்கம்
புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் துவக்கம்
ADDED : ஏப் 19, 2025 02:12 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலது புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில், விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கை, அம்பாள் உற்ஸவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
மூலவராக புற்று வடிவில் அருள்பாலிக்கும் அம்பாளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) தைலாபிஷேகம் நடைபெறும்.
அப்போது, 48 நாட்களும் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனை செய்யப்படும்.
கருவறையிலுள்ள அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.
அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும் என்பதால், அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.
தைலாபிஷேகம் நேற்று காலை ஹோமத்துடன், தைலாபிஷேகமும் நடந்தது. ஜூன் 4ம் தேதி வரை தைலாபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெறும்.

