/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி கலைஞர்கள் இசையஞ்சலி

UPDATED : ஜன 30, 2024 12:06 PM
ADDED : ஜன 30, 2024 10:38 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று (30ம் தேதி) பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு உஞ்சவிருத்தி நிகழ்ச்சியான சுவாமி வீதியுலா நடைபெற்றது. காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. பின்னர், நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக' என்ற பாடல் பாடப்பட்டது.
அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது.