/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சமய வழிபாட்டில் சம்பிரதாயம் நல்லது: மதுரை ஆதீனம்
/
சமய வழிபாட்டில் சம்பிரதாயம் நல்லது: மதுரை ஆதீனம்
ADDED : டிச 05, 2024 04:06 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே 48, மணலுார் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவின் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில், மதுரை ஆதீனம், 293வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாரத நாடு ஆன்மிக பூமி. தமிழகத்தில் தற்போது பக்தி அதிகமாக உள்ளது. சபரி மலைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர்.
அதுபோல, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாது நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர், நவக்கிரக கோவில்கள் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் தரிசனம் செய்ய தமிழகம் வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களிடம் ஆன்மிகம் அதிகரித்துள்ளது. அது இன்னும் சிறப்பு பெற வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியாவை கண்டு உலக நாடுகள் மிரளுகின்றன. வங்கதேசத்தில் நிகழும் சம்பவங்கள் வருத்தப்படும் அளவுக்கு உள்ளது. நம் நாட்டில் எல்லா மதத்தையும் ஒற்றுமையாக நினைக்கிறோம். ஹிந்து மதம் தான் எல்லா மதத்தையும் ஒன்றுபடுத்துகிறது.
சபரிமலை போன்ற கோவில்களில் வழிபாட்டில் மேற்கொள்ளப்படும் சம்பிரதாயம் மிகவும் அவசியமான ஒன்று. சமய வழிப்பாட்டில் சம்பிரதாயம் இருப்பது நல்லது தான்; அது காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.