/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அடைக்கலம் தந்த நண்பனை குத்தி கொன்ற இருவர் கைது
/
அடைக்கலம் தந்த நண்பனை குத்தி கொன்ற இருவர் கைது
ADDED : நவ 13, 2025 11:25 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பகோவிலை சேர்ந்தவர் பாலாஜி, 25; தப்பாட்ட கலைஞர். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பர் அசூர் அபிஷேக், 19; அறுவடை இயந்திர டிரைவர். அபிஷேக் நண்பர் பிரவின், 19; தப்பாட்ட கலைஞர்.
அபிஷேக், 17 வயது மாணவியை காதலித்த நிலையில், நவ., 11-ம் தேதி திருமணம் செய்வதற்காக, பாலாஜி வீட்டில் தங்க வைத்துள்ளார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம், பாலாஜி வீட்டிற்கு, அபிஷேக் தம்பி உதவியுடன் சென்றனர்.
இதற்கிடையில், அபிஷேக், பிரவின், பாலாஜி ஆகிய மூவரும், அசூர் அருகே சாத்தங்குடி வாய்க்காலில் மது அருந்திய போது, மாணவியின் பெற்றோர், பாலாஜி வீட்டிற்கு வந்த விபரம் தெரிய வந்தது.
பாலாஜி தான் தகவல் தெரிவித்திருப்பார் என எண்ணி, ஆத்திரமடைந்த அபிஷேக், பிரவினுடன் சேர்ந்து பாலாஜியை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினார். பாலாஜியின் சடலத்தை மீட்ட தாலுகா போலீசார், அபிஷேக், பிரவினை நேற்று கைது செய்தனர்.

