/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தடுப்பு இல்லாத கழிப்பறை இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
/
தடுப்பு இல்லாத கழிப்பறை இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
தடுப்பு இல்லாத கழிப்பறை இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
தடுப்பு இல்லாத கழிப்பறை இரு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 10, 2025 12:20 AM
தஞ்சாவூர்:தடுப்பு இல்லாமல் கழிப்பறை கட்டிய விவகாரத்தில், செயல் அலுவலர், இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்காக, பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அக்., 6ல் திறக்கப்பட்ட மாணவியர் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் பேஷன்கள் தடுப்பு இன்றி அமைக்கப்பட்டிருந்தது.
இவ்விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், திருச்சி மண்டல செயற்பொறியாளர் சுப்பிரமணியன், தஞ்சாவூர் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாகீர் அபூபக்கர், ஆகியோர் அந்த இடத்தில் முகாமிட்டு, கட்டட பணியாளர்களை கொண்டு, கழிப்பறையில் தடுப்புகளை கட்டினர்.
இருப்பினும், ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், இளநிலை பொறியாளர் ரமேஷ் இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அவர்கள் சென்னையில், ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.