/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிக்கிய வட மாநில கும்பலிடமிருந்து 10 கிலோ தங்கம் மீட்பு; துப்பாக்கி பறிமுதல்
/
சிக்கிய வட மாநில கும்பலிடமிருந்து 10 கிலோ தங்கம் மீட்பு; துப்பாக்கி பறிமுதல்
சிக்கிய வட மாநில கும்பலிடமிருந்து 10 கிலோ தங்கம் மீட்பு; துப்பாக்கி பறிமுதல்
சிக்கிய வட மாநில கும்பலிடமிருந்து 10 கிலோ தங்கம் மீட்பு; துப்பாக்கி பறிமுதல்
ADDED : அக் 07, 2025 08:30 PM
திருச்சி :திருச்சியில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கொள்ளை கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடம் இருந்து 10 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடை மேலாளர் குணவத், 26, என்பவர், 13ம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் திண்டுக்கல் சென்றார். அவர் சென்ற காரில், டிரைவர் மற்றும் ஓர் ஊழியர் இருந்தனர்.திண்டுக்கல்லில், குறிப்பிட்ட அளவு நகைகளை கொடுத்து விட்டு, 10 கிலோ தங்கத்துடன் சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, திருச்சி, சமயபுரம் அடுத்த இருங்களூர் அருகே, இயற்கை உபாதை கழிப்பதற்காக, காரை நிறுத்தி விட்டு, மூவரும் கீழே இறங்கினர்.அவர்களை பின் தொடர்ந்து, மற்றொரு காரில் வந்த கும்பல், குணவத் உட்பட மூவரின் கண்களில் மிளகாய் பொடியை துாவி விட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழிப்பறி செய்து தப்பினர். குணவத் புகாரில், சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தனிப்படை போலீசார், ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வடமாநிலங்களில் முகாமிட்டு, கொள்ளையர்களை தேடினர்.
அவர்களுக்கு கிடைத்த தகவல்படி, மத்திய பிரதேசம் சென்ற போலீசார், மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில், பர்வானிக்கு சென்ற பஸ்சை சோதனை செய்தனர். அதில், ராஜஸ்தானை சேர்ந்த ஜோத் மங்கிலால் தேவாசி, 22, விக்ரம் ஜாட், 19 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 9.432 கிலோ தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயை மீட்டனர்.மேலும், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.தமிழக போலீசாரால், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.