/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அரசு விரைவு பஸ் மோதியதில் டூ-வீலரில் சென்ற இருவர் பலி
/
அரசு விரைவு பஸ் மோதியதில் டூ-வீலரில் சென்ற இருவர் பலி
அரசு விரைவு பஸ் மோதியதில் டூ-வீலரில் சென்ற இருவர் பலி
அரசு விரைவு பஸ் மோதியதில் டூ-வீலரில் சென்ற இருவர் பலி
ADDED : அக் 29, 2024 03:37 AM
தஞ்சாவூர், : புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது மகன் பழனிவேல், 60. இவரும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ - வீலரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து கொல்லம் செல்லும், அல்ட்ரா டீலக்ஸ் அரசு விரைவு பஸ், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது.
தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டி பகுதியில், முன்னால் சென்ற வாகனத்தை அரசு பஸ் முந்த முயன்றது. அப்போது, எதிரே டூ - வீலரில் வந்த பழனிவேல் மீது பஸ் மோதியது. இதில், அவர் மற்றும் அடையாளம் தெரியாத பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து, வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான நாகை மாவட்டத்தை சேர்ந்த திருமாறன், 44, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.