/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கணவன் கண் எதிரே விபத்தில் மனைவி பலி
/
கணவன் கண் எதிரே விபத்தில் மனைவி பலி
ADDED : ஜூலை 18, 2025 08:51 PM
தஞ்சாவூர்:தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில், கணவன் கண் முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 50. இவரது மனைவி முத்துலட்சுமி, 43. இவர்கள், நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாருக்கு பைக்கில் வந்து விட்டு, மீண்டும் மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சானுார்பட்டி பகுதியில் பின்னால் வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியதில், மாரிமுத்து, முத்துலட்சுமி இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
முத்துலட்சுமி மீது லாரி ஏறியதில், உடல் நசுங்கி இறந்தார். காயமடைந்த மாரிமுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செங்கிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

