sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக திறன் ஜெனரேட்டர் தேவை : நகராட்சி நடவடிக்கை தாமதம்

/

பெரியகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக திறன் ஜெனரேட்டர் தேவை : நகராட்சி நடவடிக்கை தாமதம்

பெரியகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக திறன் ஜெனரேட்டர் தேவை : நகராட்சி நடவடிக்கை தாமதம்

பெரியகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக திறன் ஜெனரேட்டர் தேவை : நகராட்சி நடவடிக்கை தாமதம்


ADDED : ஜூலை 13, 2011 10:30 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் வாங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரிஜம்ஏரியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து வரும் நீர் சோத்துப்பாறை அணைவழியாக குழாய்தொட்டியில் சேகாரமாகிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் பம்ப் செய்யப்பட்டு தென்கரை, வடகரை பகுதிகளிலில் உள்ள தலா 10 லட்சம் கொள்ளளவு உடைய தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. பெரியகுளம் பகுதி மக்களுக்கு தினமும் 45 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டும். பெரியகுளம் பகுதியில் தற்போது காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மாதந்திர பராமரிப்பு காலங்களில் மின்தடை செய்யும் போது, இரு நாட்கள் குடிநீர்சப்ளை பாதிக்கிறது. இதனால் நகராட்சி கூட்டத்தில் 2008ல் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us