/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருடனை அடையாளம் கண்டு துரத்தி பிடித்த வாலிபர்
/
திருடனை அடையாளம் கண்டு துரத்தி பிடித்த வாலிபர்
ADDED : ஜூலை 14, 2011 11:55 PM
தேனி : இருபது நாட்களுக்கு பின் திருடனை அடையாளம் கண்டு துரத்தி பிடித்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.
தேனி மதுரை ரோடு, அண்ணாநகரை சேர்ந்தவர் விஜயன் (28).
ஜூன் 23ல் இரவில் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் திருட முயன்றார். விஜயன் அவரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். அதே வாலிபரை தேனி- பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகில் நேற்று முன்தினம் மாலை விஜயன் பார்த்தார். அவரை துரத்தி பிடித்து தேனி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அவரது துணிச்சலை போலீசார் பாராட்டினர். விசாரணையில், உப்புக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்த செல்வம் (24) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.