/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ADDED : ஆக 01, 2025 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு ஆங்கில ஆசிரியரான சீனிவாசா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் 35, சில நாட்களுக்கு முன் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். அவரின் அலைபேசிக்கு அவ்வப்போது சில தகவல்கள் அனுப்பி உள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் ரஞ்சித்குமார் மீது விசாரணை மேற்கொண்ட பின் சைல்டுலைன் அலுவலர்களுக்கு தெரிவித்தனர்.
அவர்களும் விசாரித்து நடந்த சம்பவத்தை உறுதி செய்தனர். இதையடுத்து ரஞ்சித் குமாரை 'போக்சோ'வில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

