/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு மைதானம் கிராம மக்கள் எதிர்ப்பு
/
விளையாட்டு மைதானம் கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 14, 2011 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சீலையம்பட்டி ஊராட்சியில் ஊரின் மையப்பகுதியில் மந்தைவெளி எனும் பகுதி உள்ளது.
இப்பகுதியை கால்நடைகள் மேய்ச்சலுக்கும், பெண்கள் கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ.3.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி செய்யப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் மூலம் கட்டித்தரப்பட்டுள்ள பொது கழிப்பிடம் போதுமானதாக இல்லை. எனவே இங்கு கூடுதல் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அதன்பின் மைதானம் அமைக்க வேண்டும்.