/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
/
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா
ADDED : செப் 07, 2024 06:44 AM

கம்பம்: கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடு நிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியை விருது பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளியில் 36 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் சாந்திக்கு மாநில நல்லாசிரியை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவ் விருதினை செப் 5 ல் சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வழங்கி கவுரவித்தார். நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை சாந்திக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக குழு தலைவர் காந்தவாசன், நல்லாசிரியை விருது பெற்ற சாந்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார். அவர் கூறுகையில் , இதுவரை இப் பள்ளியை சேர்ந்த 5 பேர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கணேசன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.