/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைக்கு எதிராக மாணவர் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு
/
போதைக்கு எதிராக மாணவர் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு
போதைக்கு எதிராக மாணவர் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு
போதைக்கு எதிராக மாணவர் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு
ADDED : ஆக 13, 2024 12:37 AM

தேனி : கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் 'போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலால்துறை உதவி ஆணையாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். தேனி டி.எஸ்.பி, பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து பேசினர்.
கல்லுாரிச் செயலாளர் தாமோதரன், கம்மவார் சங்கத் தலைவர் பாண்டியராஜ், பொதுச் செயலாளர் மகேஸ், கல்லுாரிப் பொருளாளர் வாசுதேவன், முதல்வர் சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன், பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகள் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் 'SAY NO TO DRUGS' என்ற வடிவத்தில் மாணவ சங்கிலி அமைத்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏராளமான மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.