/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நான்கு பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி
/
நான்கு பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 07, 2024 06:05 AM
தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து 141 பள்ளிகளைச் சேர்ந்த 12,611 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் புள்ளியியல் தேர்வு எழுதி 32 மாணவிகள், பொது நர்சிங் -119 பேர், வணிக கணித புள்ளியியல் -103 பேர் சிறப்புத் தமிழ் -75 பேர் ஆகிய பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். கம்யூட்டர் சயின்ஸ் 99.86 சதவீதம், தாவரவியலில் 99.82, விலங்கியலில் 99.64, உயிரியியல் 99.42, வேதியியல் 99.27, புவியியல் 99.62, கம்யூட்டர் அப்ளிகேசன்ஸ் 99.24, அரசியல் அறிவியல் 99.37, தமிழ் 99.02, கணிதம் 98.99, வணிகவியல் 98.52, வரலாறு 98.64, பொருளாதாரம் 98.01, இயற்பியல் 98.72, ஆங்கிலம் 97.42, கணக்கு பதிவியல் 96.78 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.