/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருநாய்களுக்கு பெயரளவில் நடந்த கருத்தடை ஆப்பரேஷன் மீண்டும் தொல்லை ஆரம்பம்

ADDED : மே 04, 2024 05:53 AM
கம்பம்: கம்பம், சின்னமனூர், கூடலூர் நகராட்சிகளில் கடந்த மாதம் தெருநாய்களுக்கு பெயரளவில் நடத்த கருத்தடை ஆப்பரேசனால் பயன் இல்லை. மீண்டும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. இவற்றுடன் வெறிநோய் பாதித்த நாய்களும் உலா வருகிறது.
இதனால் நாய் கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அனைத்து தரப்பினரும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தும் பயனில்லாத நிலை இருந்தது.
இந் நிலையில் கலெக்டர் நகராட்சிகளில் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்ய சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டார். அதன்படி கடந்த மார்ச்சில் கம்பம், கூடலூர், சின்னமனுார் நகராட்சிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் நடந்தது.
இதில் பெயரளவிற்கு ஒரு சில நாய்களை பிடித்து கருத்தடை செய்ததோடு நிறுத்தி விட்டனர். இதனால் தெருநாய்களின் கூட்டம் மீண்டும் சுற்றி வருகிறது. பொதுமக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.