/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் பூ மூடையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது போலீசில் புகார்
/
பஸ்சில் பூ மூடையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது போலீசில் புகார்
பஸ்சில் பூ மூடையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது போலீசில் புகார்
பஸ்சில் பூ மூடையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது போலீசில் புகார்
ADDED : மே 07, 2024 05:59 AM
கூடலுார்: அரசு பஸ்சில் பூ முடையை ஏற்ற மறுத்த நடத்துனர் ராஜாமணி மீது விவசாயி கொடியரசன் கூடலுார் போலீசில் புகார் செய்தார்.
கூடலூர் முல்லச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன். குமுளியில் இருந்து ஏர்வாடி செல்லும் அரசு பஸ்சில் பூ மூடையை ஏற்ற மறுத்ததால் நடத்துனர் ராஜாமணி மீது கூடலுார் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில்,'
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக 40 கிலோ எடை கொண்ட பூ மூடையை ஏர்வாடி சென்ற அரசு பஸ்சில் கூடலூர் பஸ் ஸ்டாண்டில் ஏற்றினேன். ஏற்ற மறுத்து பலத்த வாக்குவாதத்திற்கு பின் ரூ.500 வாங்கிக் கொண்டு மூடையை ஏற்றிச்சென்றார். மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும்.,'என புகாரில் கூறப்பட்டுள்ளது.