ADDED : செப் 01, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி எஸ்.ஆர்.எம்., உயர்நிலைப்பள்ளியில் 1977-1978 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வைகை அணை விருந்தினர் மாளிகையில் நடந்தது.
பள்ளியில் படித்த 42 பேர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளிகால நினைவுகளை நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்தனர்.
இந்த சந்திப்பினை அரசு அலுவலர் ஒன்றியத்தினர் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சுருளிராஜன், முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ராமகிருஷ்ணன், நர்மதா, மீனா உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.