ADDED : ஏப் 07, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, : போடி அருகே சிலமலை பகுதியில் தேர்தல் வீடியோ கண்காணிப்பு அலுவலர் பாண்டியன் சோதனை மேற்கொண்டார்.
சிலமலை காலனியில் உள்ள வீடுகளின் சுவர்களில் அனுமதி இன்றி தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அ.ம.மு.க., வினர் குக்கர் சின்னம் வரைந்தது தெரிந்தது. கண்காணிப்பு அலுவலர் புகாரில், போடி தாலுாகா போலீசார் அ.ம.மு.க., வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

