/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து தேனி நகராட்சி அலுவலகம் முற்றுகை காங்., கட்சியினர் போராட்டம்

ADDED : செப் 14, 2024 05:43 AM

தேனி: தேனி நகராட்சியில் 5 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பழனிசெட்டிபட்டி, வைகை அணை, வீரப்ப அய்யனார் கோயில், குன்னுார் உறைகிணறு என நான்கு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் சப்ளையாகிறது. இதில் வைகை அணையில் இருந்து 140 லட்சம் லிட்டர் குடிநீர் தேனிக்கு வழங்க வேண்டும். இத்திட்டத்தில் அணையில் இருந்து நீர் உறிஞ்சப்படும் ராட்சத குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணானது. இதனை நகராட்சி ஊழியர்கள் கடந்த 6 நாட்களுக்கு முன் சீரமைக்க துவங்கினர். இதனால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. குடிநீர் சப்ளை இன்றி வார்டுகளில் மக்கள் அவதியுற்றனர். பலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக தேனியில் குடிநீர்சப்ளை பாதிக்கப்பட்டதை கண்டித்து காங்., கவுன்சிலர்கள் நாகராஜன், சுப்புலட்சுமி, காங்., நகரத் தலைவர் கோபிநாத், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி ஆகியோர் தலைமையில் நகராட்சி நுழைவு வாயிலை மறைத்து முற்றுகையிட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் சம்சுதீன், அபுதாஹிர், எஸ்.சி., பிரிவு மாவட்டத் தலைவர் இனியவன், நகரத் துணைத் தலைவர்கள் பாலகுரு, முகமது மீரான் பங்கேற்றனர். பின் மேலாளர் முருகேசன், உதவிப் பொறியாளர் முருகன், உடைந்த குழாய் 2 நாட்களில் சீரமைப்பு செய்து குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்காலிகமாக 4 லாரிகளில் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனை ஏற்று கலைந்து சென்றனர்.