/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டன் சேலைகளுக்கு தொடர்ந்து ஆர்டர்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி: டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள், வியாபாரிகள் சுறுசுறுப்பு

ADDED : செப் 06, 2024 05:37 AM
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் ஆர்டர்கள் தொடர்ந்து கிடைப்பதாலும், வெளிமாநிலங்களில் விற்பனைக்கு செல்வதால் வியாபாரிகள், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஆர்டரின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது மந்த நிலையில் இருந்த ஜவுளி வியாபாரம் கடந்த இரு மாதங்களில் வேகம் எடுத்து வருகிறது. வியாபாரத்தில் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைப்பதால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், காட்டன் ரக சேலை வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் தினமும் 6 ஆயிரம் எண்ணிக்கையிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாகிறது. தற்போது இப்பகுதியில் பல வண்ணங்களில் உற்பத்தியாகும் பிளைன், புட்டா, முந்தி, செட்டிநாடு, காஞ்சி காட்டன், கோர்வை, கட்டம் ரக சேலைகள் கிராக்கியுடன் விற்பனையாகிறது. தமிழகம், கேரளம், கர்நாடகா மாநிலங்களில் விற்பனையான சேலைகள் தற்போது ஆந்திரா, ஒரிசா மாநிலங்களிலும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது ரூ.400 முதல் ரூ.2500 வரை விலை உள்ள சேலைகள் உள்ளன. உற்பத்தியாகும் சேலைகள் தேக்கமின்றி விற்பனை ஆவதால் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள வியாபார சூழல் தீபாவளி பண்டிகை வரை நீடிக்கும் என்பதால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள் தங்களை தொடர் உற்பத்திக்கு தயார் படுத்தி வருகின்றனர்.