/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் தொடர் மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
/
மாவட்டத்தில் தொடர் மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
மாவட்டத்தில் தொடர் மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
மாவட்டத்தில் தொடர் மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
ADDED : மே 18, 2024 05:04 AM
தேனி, : மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரியகுளத்தில் பெய்த கன மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
மாவட்டத்தில் மே 17, 18, 19 ஆகிய நாட்களில் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்', மே 20ல் அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலையிலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. பல இடங்களில் நேரம் ஆக, ஆக கனமழை கொட்டியது. இதனால் மதியம், மாலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையில் பெரியகுளம்,தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு பூங்கொடிராஜா என்பவரின் வீட்டின் மண்சுவர் இடிந்த விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இரவிலும் மழை தொடர்ந்தது.
நேற்று முன்தினம் ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 4.5, வீரபாண்டியில் 23. பெரியகுளத்தில் 6.4., சோத்துப்பாறை 1.5., வைகை அணையில் 2.4 மி.மீ., மழை பதிவாகி சராசரியாக 3.23 மி.மீ., பெய்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்வதால் பொது மக்கள் முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை 04546 -250 101 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

