/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முடங்கிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளை... தீவிரப்படுத்துங்கl
/
முடங்கிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளை... தீவிரப்படுத்துங்கl
முடங்கிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளை... தீவிரப்படுத்துங்கl
முடங்கிய ஜல்ஜீவன் திட்டப் பணிகளை... தீவிரப்படுத்துங்கl
ADDED : ஜூலை 01, 2024 05:36 AM
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.- முதலில் ஊராட்சிகள், பின் பேரூராட்சி, நகராட்சி என விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்னை என்ற அம்சத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. சீப்பாலக்கோட்டை, புலி குத்தி, பல்லவராயன்பட்டி என பெரும்பாலான ஊராட்சிகளில் பணிகள் நடக்க வில்லை. பகிர்மான குழாய் பதித்ததில் தரமில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள் என எந்த ஊரிலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் இன்னமும் துவங்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பார்ப்பதும் சிரமமாக உள்ளது.
கலெக்டர் ஷஜீவனா, ஜல் ஜீவன் திட்டப்பணிகள் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். பணிகள் முடங்கியுள்ள காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரி செய்து, ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.