/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீ விபத்தில் 2 ஆயிரம் ரேஷன் அரிசி காலி சாக்குகள் சேதம்
/
தீ விபத்தில் 2 ஆயிரம் ரேஷன் அரிசி காலி சாக்குகள் சேதம்
தீ விபத்தில் 2 ஆயிரம் ரேஷன் அரிசி காலி சாக்குகள் சேதம்
தீ விபத்தில் 2 ஆயிரம் ரேஷன் அரிசி காலி சாக்குகள் சேதம்
ADDED : செப் 13, 2024 06:10 AM

போடி: போடி புதூரில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் செயல் பட்டு வரும் கோடவுனில் நேற்று முன்தினம் இரவு திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி சாக்குகள் எரிந்து சேதமானது.
போடி கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் 24 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகள் மூலம் ரேஷன் அரிசி, ஜீனி வினியோகம் செய்த பின் அதற்கான சாக்கு பைகளை பாதுகாக்க போடி புதூரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கோடவுனில் வைக்கப்படுவது வழக்கம். இந்த கோடவுனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி, ஜீனி சாக்கு பைகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த சாக்குகள் கூட்டுறவு பண்ட சாலை மூலம் ஏலம் நடத்த டெண்டர் விடும் நிலை இருந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சாக்குகள் வைக்கப்பட்டிருந்த கோடவுனில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் சாக்குகள் தீ பற்றி எரிந்தன.
தகவல் அறிந்த போடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாக்குகள் எரிந்து சேதம் ஆனது.