தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரூ.20.17 லட்சம் பறிமுதல்

ரூ.20.17 லட்சம் பறிமுதல்

ரூ.20.17 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 26, 2024 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் பறக்கும் படையினரால் ரூ. 20.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26 ல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை போதிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20.17ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உப்புத்தரா பகுதியைச் சேர்ந்தவரிடம் பறிமுதல் செய்த ரூ.10,17,500 போலீசாரிடமும், மூவாற்றுபுழாவைச் சேர்ந்தவரும் பறிமுதல் செய்த ரூ.10 லட்சம் மூவாற்றுபுழா கருவூலத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

அகற்றம்: தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக இதுவரை சி-விஜில் செயலி மூலம் 588 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

அதன்படி பொது இடங்களில் விதிமுறைகள் மீறி வைக்கப்பட்ட 776 பேனர்கள், 341 கொடிகள், 3430 சுவரொட்டிகள் ஆகியவை பறக்கும் படை, ஊழல் தடுப்பு படை ஆகியோரால் அகற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us