/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் 80 'சிசிடிவி கேமராக்கள்' பழுதாகி முடக்கம்; குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறல்

ADDED : ஆக 04, 2024 06:15 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 80 கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து முடங்கியுள்ளது. குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
பெரியகுளத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் தென்கரையில் 50, வடகரையில் 30 என 80 சிசிடிவி கேமராக்கள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்தன.
மூன்றாந்தல் பகுதியிலிருந்து 3 கி.மீ., தூரம் வரை தென்கரை, தாமரைக்குளம் வரை கேமராக்கள் காட்சிகள் பதிவாகியது. கேமராக்களில் பதிவாகும் வீடியோ பதிவுகள் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பெரிய டி.வி.,யில் கண்காணிக்கலாம்.
இதன் பதிவுகளை 14 நாட்கள் வரை பார்க்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த 'சிசிடிவி' பதிவுகள் போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்தது. இதற்காக சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணித்தனர்.
திருட்டு, குற்றங்கள் குறைந்தது. திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் மிக விரைவாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஓராண்டாக சிசிடிவி கேமராக்கள் ஒன்றொன்றாக பழுதாகி 80 கேமராக்களும் முடங்கியது. கட்டுப்பாட்டு அறை செயல்பாடு நிறுத்தப்பட்டது.
பெரியகுளம் பாரதி நகரில் கொள்ளையர்கள் ஒரு வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.
அப்போது பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது, அத்தனையும் பழுதடைந்தது தெரிந்தது. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 45 நாட்கள் ஆனது. கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். --