/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் பட்டியலில் 80 பேர் நீக்கம் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
/
வாக்காளர் பட்டியலில் 80 பேர் நீக்கம் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
வாக்காளர் பட்டியலில் 80 பேர் நீக்கம் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
வாக்காளர் பட்டியலில் 80 பேர் நீக்கம் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : ஏப் 20, 2024 06:11 AM

தேனி: போடி தொகுதி,உப்புக்கோட்டை வாக்காளர் பட்டியலில் 80 பேரின் பெயர் இல்லாததால் ஓட்டளிக்க முடியாமல் மறியலில் ஈடுபட்டனர்.
போடி ஒன்றியம், உப்புக்கோட்டை ஊராடசி, பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் 133, 136 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.நேற்று ஓட்டுப்பதிவு துவங்கியது. தெற்குத்தெருவில் வசிக்கும் மக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பிட்ட இந்த 80 பேர் பட்டியல் அவ்வூரில் அமைந்துள்ள மற்ற வாக்காளர் பட்டியலிலும் இல்லை. பட்டியலில் பெயர் நீக்கியது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டனர். பின் டி.எஸ்.பி., சுந்தரராஜ், வீரபாண்டி எஸ்.ஐ., கோகுலகண்ணன், வி.ஏ.ஓ., வெங்கடேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் விரக்தி அடைந்த மக்கள் உப்புக்கோட்டை தேனி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பின். பகல் 12:00 மணிக்கு போடி தாசில்தார் மணிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் ஓட்டுச்சாவடி அதிகாரிகளிடம் பேசினார். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஓட்டளிக்க வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்தவரகள், அச்சாவடியில் நடந்து வந்த ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும் என கூச்சலிட்டனர். இதற்கு தாசில்தார், அதுதவறு, ஓட்டுப்பதிவு நிறுத்துவது சட்டப்படி குற்றம். தேர்தல் விதிமீறலாகும்.' என, தெரிவித்தார். பின் ஏமாற்றத்தடன் கலைந்து சென்றனர்.
ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பாண்டீஸ்வரி, கணவர் அவரது குடும்பத்தினர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளித்தோம்.
தற்போது பட்டியலில் இல்லை ஒருவாரமாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என வார்டு உறுப்பினர் புகார் கூறினார்.

