/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குக்கர் சின்னத்தை வாக்காளரிடம் சேர்க்க அ.ம.மு.க., வேண்டுகோள்
/
குக்கர் சின்னத்தை வாக்காளரிடம் சேர்க்க அ.ம.மு.க., வேண்டுகோள்
குக்கர் சின்னத்தை வாக்காளரிடம் சேர்க்க அ.ம.மு.க., வேண்டுகோள்
குக்கர் சின்னத்தை வாக்காளரிடம் சேர்க்க அ.ம.மு.க., வேண்டுகோள்
ADDED : ஏப் 03, 2024 07:11 AM
கம்பம் : வாக்காளர்களிடம் அ.ம.மு.க.,வின் குக்கர் சின்னம் கொண்டு செல்ல பா.ஜ.,முழு வீச்சில் களப்பணியாற்ற வேண்டும் என்று அ.ம.மு.க., சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடிப்படை உட்கட்டமைப்பும், குறிப்பிட்ட சதவீத ஒட்டு வங்கியும் உள்ளது. அத்துடன் கூட்டணி பலம் உள்ளது. அ.ம.மு.க. பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அ.ம.மு.க.,விற்கு கட்சி உட்கட்டமைப்பு வலுவாக இல்லை. ஆனால் பா.ஜ. வின் உள்கட்டமைப்பு உள்ளது. இத் தேர்தலை பொறுத்தவரை அ .ம.மு.க. விற்கும் பா.ஜ. விற்கும் சின்னம் ஒரு தலைவலியாக உள்ளது.
பா.ஜ. 6 மாதங்களுக்கு முன்பே தங்களது தாமரை சின்னத்தை சுவர்களில் வரைந்துள்ளனர். ஆனால் திடீரென கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கியதால் தாமரையை கூற முடியாமல் உள்ளனர். அ.ம.மு.க.,தினகரன் ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றுள்ளார். இப்போதும் இரட்டை இலையில் தான் நிற்கிறார் என கிராமங்களில் நினைக்கின்றனர்.
தினகரனின் சின்னம் குக்கர் சின்னம் என்பதை வாக்காளர் மனதில் பதிய வைக்க வேண்டும். அதற்கான களப் பணியை பா.ஜ., மேற்கொள்ள வேண்டும் என அ.ம.மு.க.,வினர் கோருகின்றனர். விதவிதமான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க தயாராகி உள்ளனர். நாளை முதல் அ.ம.மு.க., பா.ஜ. வின் தேர்தல் பணிகள் களை கட்டும் என தெரிகிறது.

