/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடி அலுவலர் மாற்றம் போதை ஏஜன்ட் வெளியேற்றம் விதியை பின்பற்றாததால் நடவடிக்கை

ADDED : ஏப் 20, 2024 06:14 AM
தேனி: ஓட்டுச்சாவடிகளை 'வெப்கேமரா' மூலம் கண்காணித்ததில் காமாட்சிபுரம் ஓட்டுச்சாவடியில் விதியை பின்பற்றாத ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலரை மாற்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
தேனி லோக்சபா தொகுதியில் 1788 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 1250 ஓட்டுச்சாவடிகளில் 'வெப்கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் கேமராவில் இணையவசதி, மெமரி கார்டு வசதியுடன் பொருத்தப்பட்டன. நேற்று கண்காணிப்பு அறையில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா ஓட்டுச்சாவடி பணிகளை கண்காணித்தார்.
இதில் ஓட்டுச்சாவடியில் அதிக அளவில் நபர்கள் இருந்தால் அவர்கள் வெளியேற்ற அலைபேசி மூலம் உத்தரவிட்டார்.
கம்பம் தொகுதிக்குட்பட்ட காமாட்சிபுரம் ஓட்டுச்சாவடியில் பணிபுரிந்த முதல்நிலை பெண் அலுவலர் விதிகளை பின்பற்றாமல் இருப்பதை கேமரா மூலம் கண்டறிந்தார். அவரை மாற்ற மதியம் உத்தரவிட்டார். அவரை பணியில் இருந்து மாற்றி வேறு அலுவலர் பொறுப்பேற்றார். சாமாண்டிபுரத்தில் பூத் ஏஜென்ட்டாக பணியாற்றியவர் வெளியூர் நபர் என்பது தெரியவந்தது. அவர் மது அருந்தி அங்கு வந்தை அதிகாரிகள் உறுதி செய்து அவரை வெளியேற்றினர்.