/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனால் தேர்தலே நடக்காது நடிகர் சந்திரசேகர் பிரசாரம்

ADDED : ஏப் 07, 2024 05:47 AM
கடமலைக்குண்டு : மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால் இனி தேர்தல் நடக்காது. ராணுவ ஆட்சிதான் நடக்கும் என சினிமா நடிகர் சந்திரசேகர் பிரசாரம் செய்தார்.
தேனி தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து கண்டமனுாரில் அவர் பேசியதாவது: என் மாப்பிள்ளை தங்க தமிழ்செல்வனுக்கு ஓட்டு கேட்கிறேன். எத்தனையோ பேர் வந்தார்கள், நாம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். நம் மண்ணைச் சேர்ந்த நம்ம ஆளு ஒருவர் தற்போது போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். வழக்கம்போல் வந்து செல்லும் தேர்தல் அல்ல இது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வந்தால் இனி தேர்தலே நடக்காது. ராணுவ ஆட்சி தான் நடக்கும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே சாமி என்றால் எப்படி. நான் கும்பிடும் குலசாமி வேண்டாமா, பா.ஜ., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். முதல்வர் ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வெற்றி பெற்று டெல்லிக்கு 'பிளைட்' ஏறினால் மோடி வீட்டுக்கு போய்விடுவார். அதுதான் நடக்க போகிறது. மலைக்குப் போனாலும் மாமன் மைத்துனர் துணை வேண்டும் என்பார்கள், தற்போது தேர்தலிலும் மாமன் மைத்துனர் துணை தேவைப்படுகிறது, இவ்வாறு பேசினார்.