ADDED : மே 18, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார், கடந்த ஒரு வாரமாக கூடலுார், கம்பம், குமுளி பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
லோயர்கேம்பில் துவங்கும் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கலங்கிய நிலையில் ஓடுகிறது. இதனை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குளோரினேசன் செய்த பின் சப்ளை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் கலங்கிய நிலையிலேயே குடிநீர் சப்ளையாகிறது. அதனால் தொற்று நோய் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

