ADDED : ஜூன் 09, 2024 03:52 AM
தேனி, : தேனி எல்.எஸ்., மில்லில் வேலை செய்யும் அலுவலர்கள், தொழிலாளர்கள் குழந்தைகளில் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். விழாவிற்கு எல். எஸ்., மில்ஸ் குழுமத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசினார். மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ. 15ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆயிரம் பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மில் குழும இயக்குனர் சாந்தி, ஆடிட்டர் ராஜசேகரன், வக்கில்கள் அமர்நாத் பாபு, ஈஸ்வரன், ஹபீஸ், மில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.