/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீன் திருட்டை எச்சரித்த காவலாளி மீது தாக்குதல்
/
மீன் திருட்டை எச்சரித்த காவலாளி மீது தாக்குதல்
ADDED : ஏப் 27, 2024 05:06 AM
ஆண்டிபட்டி: தேனியை சேர்ந்த தமிழரசன் என்பவர் வைகை அணையில் மீன் பிடித்தலுக்கான குத்தகையை 5 ஆண்டுக்கு ஏலம் எடுத்து நிர்வகித்து வருகிறார்.
வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் திருட்டு மீன்களை தடுப்பதற்காக குத்தகைதாரர் மூலம் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகை புதூரைச் சேர்ந்த பாண்டி 41, காவலராக பணியில் இருந்த போது திருட்டு மீன்கள் பிடித்தவர்களை எச்சரித்துள்ளார்.
இதனை முன் விரோதமாக மனதில் வைத்து வைகை அணை பொதுப்பணித்துறை குடியிருப்பைச் சேர்ந்த பிரிதிவிராஜ் 29, கார்த்திக் 27, ஆகியோர் வைகை அணை ரவுண்டானா ஆர்ச் அருகே வந்த காவலர் பாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாண்டி புகாரில் வைகை அணை போலீசார் பிரிதிவிராஜை கைது செய்தனர். கார்த்திகை தேடி வருகின்றனர்.

