sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லும் குழந்தைகள் மீது கவனம் தேவை; ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை அவசியம்

/

நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லும் குழந்தைகள் மீது கவனம் தேவை; ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை அவசியம்

நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லும் குழந்தைகள் மீது கவனம் தேவை; ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை அவசியம்

நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லும் குழந்தைகள் மீது கவனம் தேவை; ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை அவசியம்


ADDED : ஏப் 25, 2024 03:57 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கி உள்ளது. வகுப்பறையில் அடைபட்டு இருந்த மாணவர்கள் சுதந்திர பறவைகளாக கருதி உற்சாகமாக விளையாட கிணறுகள், கண்மாய், குளம் குட்டைகள், பயன்பாடு இல்லாத நீர் தேங்கிய கல்குவாரிகள் உள்ளிட்டவற்றை தேடி செல்வார்கள்.

இதில் ஆபத்தான நீர் நிலைகளை பற்றி அறியாமல் சிறுவர்கள் பலரும் நீச்சல் தெரியாமலே நண்பர்களுடன் இணைந்து நீரில் இறங்கி விளையாடுவார்கள். தங்களை அறியாமல் ஆபத்தான இடங்களுக்கு சென்ற நீரில் முழ்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும். இச் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகம் நிகழ்ந்துள்ளன. இதனால் கோடை விடுமுறையில் பெற்றோர் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்திட வேண்டும்.

குழந்தைகள் வெளியில் செல்லும் போது யாருடன் செல்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து பாதுகாப்பை உறுதி செய்து அனுப்ப வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்ள செல்கிறார்கள் என்றால் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன், பயிற்சியாளர் முன்னிலையில் மேற்கொள்வது சிறந்தது.

பயன்படாத குவாரிகள், ஊரக பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆழமான பகுதிகள் உள்ள இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், கனிம வளத்துறையினர் சார்பில் அபாய பகுதி என எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். அப்பகுதியில் போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு நண்பகளுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் தேனி ரயில்வே ஸ்டேன் அருகில் தேங்கி இருந்த கிடங்கு நீரிலும் , கல்லுாரி மாணவர் ஒருவர் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் குளிக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டும், நீச்சல் தெரியாமலும் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இந்த கோடை விடுமுறையை குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us