/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி துவக்கம்
ADDED : மார் 22, 2024 05:32 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து தொகுதி வாரியாக அனுப்பும் பணி நேற்று துவங்கியது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்புவது தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கம்யூட்டரில் ரேண்டம் முறையில் குலுக்கலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை திறக்கப்பட்டது. அறையில் ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள்1676, ஓட்டுப்பதிவு இயந்திரம் 2791, வி.வி., பேட் 1765 இருந்தன. அதனை ஸ்கேன் செய்து தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நடந்தது. தேவையான இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் அனுப்ப பட உள்ளன. இந்த இயந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

