/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ரோடு மறியல்
/
பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ரோடு மறியல்
பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ரோடு மறியல்
பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை கண்டித்து ரோடு மறியல்
ADDED : மே 24, 2024 03:28 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி 21 வது வார்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதை கண்டித்து இந்த பகுதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் நகராட்சி மீனாட்சி அம்மன் கோயில் அருகே பல நாட்களாக பாதாளச்சாக்கடை கழிவுநீர் வெளியேறுகிறது. இக்கழிவு நீர் தெருக்களில் சிறிய அளவிலான சென்று சாக்கடையில் சேர்கிறது.
கழிவுநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முன்பு தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
மேலும் இந்த ரோட்டில் மழை காலங்களில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள 5 மேன்ஹோல் மூடி திறந்து ரோட்டில் கழிவுநீர் செல்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் காய்ச்சலினால் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் அருகேயுள்ள வராகநதியிலும் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
நேற்று இந்த வார்டு பொதுமக்கள் பாதாள சாக்கடை கழிவுநீர், தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பி, ரோட்டில் கற்களை பரப்பி தடை ஏற்படுத்தி ஒரு மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை செல்லும் சிறிய குழாய்களை அகற்றிவிட்டு பெரிய அளவிலான குழாய்கள் பதித்து, பாதாள சாக்கடை அபிவிருத்தி பணி துவங்கவேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.