/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பிரெய்லி' எழுத்துக்கள் அமைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பிரெய்லி' எழுத்துக்கள் அமைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பிரெய்லி' எழுத்துக்கள் அமைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பிரெய்லி' எழுத்துக்கள் அமைப்பு
ADDED : மார் 29, 2024 05:57 AM
தேனி : தேனி லோக்சபா தொகுதியில் பார்வை திறன் குறைவுடைவர்கள் எளிதாக ஓட்டளிக்கும் வகையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பிரெய்லி எழுத்துகள் அமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவை எளிதாகக்கும் வகையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதில் அவர் கூறியதாவது: தொகுதியில் உள்ள மாற்றுத்திறன் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்திட பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி நுழைவு வாயில் முதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் வரை செல்வதற்கான சாய்வுதள வசதி இருக்க வேண்டும். தேவையான சக்கர நாற்காலிகள், தன்னார்வலர்களுடன் இருக்க வேண்டும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'பிரெய்லி' மொழி அடையாளம் இருப்பதை அலுவலர்கள் உறுதிட வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் சிறப்பு வாக்காளர் உதவி மையம் இயங்குகிறது. தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், உதவிகளுக்கும் 95438 13074, 90474 52274 என்ற தொலைபேசி எண்களிலும், வீடியோ அழைப்பு, சைகை மொழி அழைப்புகளில், வாய்ஸ் கால்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நல அலுவலர் காமாட்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

