/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா செடி வளர்த்தவர் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
/
கஞ்சா செடி வளர்த்தவர் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
கஞ்சா செடி வளர்த்தவர் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
கஞ்சா செடி வளர்த்தவர் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
ADDED : மார் 29, 2024 06:00 AM

கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வருஷநாடு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், வனத்துறையினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஓயாம்பாறை வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான தோட்டத்தை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்தவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து தோட்டத்தில் ஆய்வு செய்ததில் விவசாய பயிர்களுக்கு நடுவே கஞ்சா செடிகளை வளர்த்து பராமரிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா செடிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் வாலிப்பாறையை சேர்ந்த சிவனாண்டி மகன் சிங்கம் 45, என தெரிந்தது.அவரை கைது செய்தனர்.
தோட்டத்தில் தங்கி இருந்து கஞ்சா செடிகளை வளர்த்து அதனை விற்பனை செய்ததும், பாதுகாப்பிற்கு நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

