/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., மா.கம்யூ., நிர்வாகிகள் மீது தாக்குதல் பேரூராட்சி தலைவர் உள்பட 18 பேர் மீது வழக்கு

ADDED : ஏப் 20, 2024 06:15 AM
தேனி: பழனிசெட்டிபட்டி பேரூர் தி.மு.க., செயலாளர், மார்க்சிஸ்ட், நிர்வாகி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உட்பட 18 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இவ்வூர் தி.மு.க., செயலாளர் செல்வராஜ் 54. இவர் கட்சி நிர்வாகிகள் செந்தில், சிலம்பரசன், பிரபு ஆகியோருடன் இணைந்து தேர்தல் குறித்து நேற்று பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, மணிமொழியன், மதன் சக்கரவர்த்தி, சிவா, விக்கு, மகேந்திரன், பிரபு ஆகிய ஏழு பேர் விறகு கட்டை, இரும்பு கம்பிகளால் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வராஜ் புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உள்பட ஏழு பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பழனிசெட்டிபட்டி தெற்குதெரு வீரமணி 52. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தாலுகா குழு உறுப்பினர். இவர் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி மற்றும் 10 பேர், வீரமணியை வார்த்தையால் திட்டி தாக்கினார்.
பாதிக்கப்பட்ட வீரமணி புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி மேலும் 10 பேர் என 11 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.