ADDED : ஏப் 19, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி தி.மு.க., பொறுப்பாளர் ரஞ்சித்குமார் 47. தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் பேரில், பறக்கும் படை அலுவலர் முஹைதீன் ஆரிப்ரகுமான், ரஞ்சித்குமாரிடம் சோதனை செய்தார். இதில் வாக்காளர் விபரங்கள் அடங்கிய பட்டியல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.24,200 யை வைத்திருந்தார்.
இதனை முகைதீன் ஆரிப்ரகுமான் கைப்பற்றினார். இவரது புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், ரஞ்சித்குமார் மீது வழக்கு பதிவு செய்தார்.

