/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை வெயிலை சமாளிக்க குளங்களை நாடும் கால்நடைகள்
/
கோடை வெயிலை சமாளிக்க குளங்களை நாடும் கால்நடைகள்
ADDED : மே 07, 2024 05:51 AM

பெரியகுளம்: 'வெப்பக் காற்றை சமாளிக்க மாடுகள் தாமரைக்குளம் கண்மாயில் குளித்து குரல் எழுப்புவதுடன், தண்ணீரில் நீண்ட நேரத்தை செலவழித்து உடலை குளிர்விக்கின்றன.' என மாடு மேய்ப்பாளர் தெரிவித்தார்.
பெரியகுளம் பகுதியில் பகலில் வெப்பக்காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தினமும் இரண்டு முதல் மூன்று முறை தண்ணீரில் குளித்து வெட்கையை தணித்து கொள்கின்றனர். மோர், ஜூஸ் வகைகளை குடித்து உடலை குளிர்விக்கின்றனர்.
தகிக்கும் வெயிலை சமாளிக்க தாமரைக்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், ஆடுகள் தாமரைக்குளம் கண்மாயில் குளித்து குரல் எழுப்புகின்றன.
மாடு மேய்ப்பாளர் சின்னச்சாமி கூறியதாவது: கோடை காலத்திற்கு முன் மாடுகள் புற்களை மேய்ந்த பிறகு தண்ணீர் குடிக்க கண்மாய்க்கு செல்லும். தற்போது வெயில் தாக்கத்தால் முதலில் கண்மாயில் ஒரு மணிநேரம் தண்ணீரில் இறங்கியும், கண்மாயை சுற்றி இதமான காற்று வீசுவதால் இதில் உலாவி சென்று கடைசியாக புற்களை மேய்கின்றன. மாடுகள் பசியை விட, வெயிலை சமாளிக்க கண்மாயில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.', என்றார்.