/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: பள்ளி மாணவிகள் ஆர்வம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: பள்ளி மாணவிகள் ஆர்வம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: பள்ளி மாணவிகள் ஆர்வம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: பள்ளி மாணவிகள் ஆர்வம்
ADDED : செப் 12, 2024 05:31 AM

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்குகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இரண்டாவது நாளாக நடந்தது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான பிரிவு போட்டிகள்நேற்று முன்தினம் துவங்கியது. மாணவர்களுக்கான போட்டிகள் நேற்றும் தொடர்ந்து நடந்தது. அதே போல் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் நேற்று துவங்கியது.
மாணவிகளுக்கான கால்பந்து, தடகளம், குண்டு எறிதல், கேரம், செஸ், தடை தாண்டுதல் ஓட்டம், கைப்பந்து உள்ளிட்டவை நடந்தது. இன்றும் பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கான போட்டிகள் நடக்கிறது.
போட்டிகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், பல்வேறு விளையாட்டு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் செப்.,17 ல் துவங்குகிறது.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விபரம்மாணவர்கள் பிரிவு
கோ-கோ போட்டிடி.சிந்தலைச்சேரி அமல அன்னைமேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
செஸ்: கோகுல், அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி. தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி சந்துரு, பிரகலாதன்.
வாலிபால்: வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
டேபிள் டென்னிஸ்ஒற்றையர்: அஜய்முத்தையா, ஷாஜன்,சித்தந்யாத்ரா.
டேபிள் டென்னிஸ் இரட்டையர்: வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலம்மாள் சி.பி.எஸ்.இ.,
கிரிக்கெட்: டி.கள்ளிபட்டி எஸ்.டி.ஏ., பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
கபடி: அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார் எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி.
ஹாக்கி: தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கடாஜலபுரம் ஸ்ரீவரத வேங்கட ரமண மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி.
கூடைப்பந்து:முதல் இரு இடங்கள் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3ம் இடம் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
தடகளம்: 100மீ., சர்வேஷ்வரன், ஹரிகிருஷ்ணன். 200மீ., சஞ்சய்குமரன், மித்ரன், டோமினிக் இர்வின் ரபேல். 400மீ., அழகேஸ், ஆகாஷ், இன்பதமிழன். 800மீ., அழகேஸ், பிரதீஸ், ராய்ஸ்டன். 3000மீ.,ஆல்வின்சேஷன், தனுஷ்குமார், சக்தீஸ்வரன்.
தடைதாண்டுதல் ஓட்டம்: ஜெயபிரனேஸ், பிரபு, அசோக்குமார்.
உயரம் தாண்டுதல்: அசோக்குமார், ஆகாஷ், ஸ்ரீராம்.நீளம் தாண்டுதல்: ஜெயபிரனேஷ், கலையரசு, ஹரிகிருஷ்ணன்.
வட்டு எறிதல்: தர்ணேஷ், சஸ்வந்த், விபீஸ்னன்.குண்டு எறிதல்: சஸ்வந்த், தாரனேஸ், அகிலேஸ்வரன்.
மாணவிகள் பிரிவில்கைப்பந்து: ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி, போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
செஸ்: மிருதலா, சாத்விகா, பரணி.
டேபிள் டென்னிஸ் ஒற்றையர்: பூஜாஸ்ரீ, சுபிக்ஷாஸ்ரீ, சாதனா.
டேபிள் டென்னிஸ் இரட்டையர்: டி.எம்.எச்.என்.யூ., வித்யாலயா, பிரசன்டேஷன் காண்வென்ட் தேனி, போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.