/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு; கட்டட பொறியாளருக்கு கண்டிப்பு

ADDED : ஜூலை 27, 2024 06:30 AM
கம்பம், : கம்பம் அரசு மருத்துவமனையில் விபத்து நடந்த புதிய கட்டடத்தை நேற்று மாலை கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பின்றி வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை பார்த்ததும், பொறியாளரை அழைத்து கண்டித்தார்.
கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்டடத்தின் போர்டிகோ பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிலாப் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கலெக்டர் ஷஜீவனா திடீரென அரசு மருத்துவமனைக்கு வந்தார். விபத்து நடந்த கட்டடத்தை பார்வையிட்டார். பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அங்கிருந்து பொறியாளரை அழைத்து கண்டித்தார். 'இது போன்று நடந்து கொள்ளாதீர்கள். இனிமேல் விபத்து நடக்க கூடாது' என்று கூறினார்.
தொடர்ந்து மருத்துவமனைக்குள் சென்று நோயாளிகளிடம் வழங்கும் சிகிச்சைகள் குறித்து கேட்டார். கலெக்டர் விசிட் செய்த போது, மருத்துவ அலுவலர் பொன்னரசன் இல்லை. பணியில் இருந்த டாக்டர்களிடம் விபரங்களை கேட்டார்.