நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் கதிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மணிவேல், இவரது 17 வயது மகள் ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்தார்.
மூன்று நாட்களுக்கு முன் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மணிவேல் தனது குடும்பத்துடன் ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளார். சுவாமி தரிசனம் முடிந்த பின் உடன் வந்த மகளை காணவில்லை. குடும்பத்துடன் அப்பகுதியில் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மணிவேல் வைகை அணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.