/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஆக 29, 2024 08:44 AM

தேனி: தேனி-பெரியகுளம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அகற்றும் பணியை நேற்று துவங்கியது.
தேனி நேரு சிலையில் இருந்து பெரியகுளம் ரோட்டில் பைபாஸ் வரையில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலையில் துவங்கியது. ரோட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கொடிமரங்கள், விளம்பர பதாகைகள், துாண்கள் அகற்றப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரோடு விரிவாக்க பணிக்காக இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்தாண்டும் இதே போல் அல்லிநகரம், மதுரை ரோடு பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கிய வேகத்தில், அரசியல் அழுத்தத்தால் முடங்கியது. பின் சிலநாட்களில் ஆக்கிரமிப்பாளர்கள் செங்கல் கட்டடங்கள் எழுப்பினர்.எனவே பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.