நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ல் நாடு முழுவதிலும் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 70 அரசுப்பள்ளிகளில் படிக்கும் 252 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச் 25 முதல் நேற்று வரை சிறப்புபயிற்சி வழங்கப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம் சி.பி.யூ., பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. பயற்சியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.