/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரவுடிகள், குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்
/
ரவுடிகள், குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்
ரவுடிகள், குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்
ரவுடிகள், குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஆக 09, 2024 12:37 AM
தேனி: தேனி எஸ்.பி., சிவபிரசாத் போலீஸ் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டத்தில் தொடர் திருட்டு, கஞ்சா, கஞ்சா மாத்திரை, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், போதை ஊசி ஆகியவற்றை பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வோர், ரவுடிகள், கூலிப்படையாக செயல்பட்டு கொலை குற்றங்களில் ஈடுபடுவர்கள் 300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் குற்ற சரித்திர கையேடுகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் பட்டியலில் உள்ள ரவுடிகள், சிறைக்கு சென்று திரும்பியவர்கள், தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களின் தற்போதைய செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். கூடுதல் குற்றங்கள் நடக்காமல் தவிர்க்க குற்ற சரித்திர கையேடுகளை உயிர்ப்புடன் வைத்து, அதில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என எஸ்.பி., போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.