/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரவுகள் திருடி மோசடிக்கு வாய்ப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
தரவுகள் திருடி மோசடிக்கு வாய்ப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தரவுகள் திருடி மோசடிக்கு வாய்ப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தரவுகள் திருடி மோசடிக்கு வாய்ப்பு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 27, 2024 05:03 AM

தேனி : 'எஸ்.பி.ஐ., ரிவார்டு பாயின்ட்' என்ற போலி அலைபேசி செயலி பதிவிறக்கம் செய்தால் வாட்ஸ் ஆப் குழுக்கள் 'ஹேக்' செய்து மோசடி நடக்க வாய்ப்புள்ளது' என, தேனி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தேனியை சேர்ந்த இருவரின் அலைபேசிகளில் ஐந்து நாட்களுக்கு முன் 'எஸ்.பி.ஐ., ரிவார்டு பாயின்ட்' என்ற பெயரில் 'வாட்ஸ் ஆப்'பில் செயலி பதிவிறக்கம் ஆனது. அதில், உங்களுக்கு எஸ்.பி.ஐ., நெட் பேங்கிங் ரிவார்ட் பாயின்ட்ஸ் ரூ.7250 கிடைத்துள்ளது. நீங்கள் இன்று அதனை ஆக்டிவேட் செய்யாவிடில் காலாவதியாகிவிடும். இதனால் எஸ்.பி.ஐ., ரிவார்ட்ஸ் பாயின்ட் செயலியை இன்ஸ்டால் செய்து, பணத்தை வங்கிக்கணக்கிற்கு மாற்றி பயன் பெறுங்கள் என, ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தது. இன்ஸ்ட்டால் செய்த பின் அவர்கள் அலைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்த வாட்ஸ் குழுக்களின் (டி.பி., டிஸ்பிளே படம்) முழுவதும் எஸ்.பி.ஐ., வங்கியின் செயலியின் படமாக மாறிவிட்டது. வாட்ஸ் ஆப் குழுக்களும் 'ஹேக்' செய்யப்பட்டன. பின் வேறு வழியின்றி செயலியில் உள் நுழைந்தால் 'எஸ்.பி.ஐ., வங்கி'யின் 'YONO' ஆன்லைன் இணையத்தளம் போன்று, போலி இணையத்தள பக்கம் திறக்கப்பட்டு, அதில் நோ யுவர் கஸ்டமர் கே.ஓய்.சி., விபரங்கள் அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த அவர்கள், தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
தேனி இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கூறியதாவது: சமீப நாட்களாக எஸ்.பி.ஐ., வங்கியின் பெயரில் போலி செயலி பதிவிறக்கம் ஆவது நடந்து வருகிறது. அதனால் பொது மக்கள் இச்செயலியை பயன்படுத்தி உங்களது வங்கி, சுய விபர தரவுகளை இழக்க வேண்டாம்.
வாட்ஸ் ஆப் குழுக்கள் ஹேக் செய்யப்படுவதால் இதுமாதிரியான செயலிகளை அலைபேசிகளில் இன்ஸ்ட்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். இது குறித்து 2 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகத்திற்கும் மாவட்ட எஸ்.பி., வழிகாட்டுதலில் கடிதம் அனுப்ப உள்ளோம்.', என்றார்.