ADDED : ஜூலை 03, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி தொழிற்பேட்டை காலனியை சேர்ந்த முதியவர் ஜெயகீதன் 78. இவரது மகள் ஜெயபாரதியும், சங்கராபுரம் சூர்யாவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் முடித்தனர்.
2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வசிக்கின்றனர். ஜூன் 30ல் ஜெயபாரதியும், அவரது தந்தையும் வீட்டில் இருந்தபோது அத்துமீறி வீட்டில் நுழைந்த சூர்யா, மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தேனி போலீசார் சூர்யா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.