/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் ஓ.பி.,சீட்டு வழங்க தாமதம்
/
அரசு மருத்துவமனையில் ஓ.பி.,சீட்டு வழங்க தாமதம்
ADDED : ஆக 07, 2024 06:15 AM
பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு தினமும் வெளிநோயாளிகள்ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவர்கள் கம்ப்யூட்டரில் பெயர், வயது, ஊர் விபரங்களை பதிவு செய்து ஓ.பி., சீட்டு பெற வேண்டும். அதன்பின் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். அனைத்து நாட்களிலும் ஓ.பி., சீட்டு காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12:00 வரை பதிவு செய்யப்படுகிறது. திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இப் பிரிவில் உள்ள இரு பணியாளர்கள் டைப்பிங் பயிற்சி இன்றி திணறுகின்றனர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் விரைவாக ஓ.பி., சீட்டு பெற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.